Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : திமுக.,விலிருந்து ராதாரவி அதிரடி நீக்கம்

25 மார், 2019 - 10:31 IST
எழுத்தின் அளவு:
DMK-take-action-against-Radharavis-controversy-speech-about-Nayanthara

சினிமா நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சையான கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுக.,விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சை கருத்து


நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயா தான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது. பார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றார்.

கண்டனம்


ராதாரவியின் பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ராதாரவி, சின்மயி, விக்னேஷ் சிவன், விஷால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.

விக்னேஷ் சிவன் கண்டனம்

விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து நிலைத்திருக்கும் வகையில் ராதாரவி போன்ற ஆண்கள் புனிதப்படுத்துகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, மரியாதைக்குரிய தலைவர்கள் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். ஆண் இனவாதம் பிடித்த, பெண்களுக்கு எதிராகச் செயல்படும் ராதாரவிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது. தயவுகூர்ந்து இதை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டார்.

ஸ்டாலின் கண்டனம்

திமுக., தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டார்.

அதிரடி நீக்கம்


இந்நிலையில், தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த ராதாரவி

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ராதாரவி, "என்னால் திமுக.,விற்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். கொலையுதிர் காலம் பட விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதேவியை களங்கப்படுத்தும் எண்ணம் இல்லை : பிரியா வாரியார்ஸ்ரீதேவியை களங்கப்படுத்தும் எண்ணம் ... பார்த்திபன் மகள் திருமணம் : திரையுலகினர் வாழ்த்து பார்த்திபன் மகள் திருமணம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 மார், 2019 - 05:16 Report Abuse
meenakshisundaram இது சும்மானாச்சிக்கும் ஸ்டாலின் செய்யும் தகிடு தத்தம் .ஏன்னா வேறு நாதியே கிடையாது அதே போல் ஸ்தாலினுக்கும் .மொத்தமாக இவனுங்க கட்சியிலே ஆட்களே இல்லை.எவ்வளவு சோப்பு போட்டாலும் நாறும் மனுஷங்களே இவங்க.
Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
26 மார், 2019 - 03:33 Report Abuse
Agni Kunju . சுடலையும் எலக்ஷன் டைமுல பல்டி அடிச்சிருக்காரு... பாவம் ரவிக்கு இந்த சீசன் டைம்ல வருமானம் போச்சு ... சுடலைக்கும் ஒரு ஸ்டார் பேச்சாளர் அவுட்...
Rate this:
Sanakkiyan - Erode,இந்தியா
25 மார், 2019 - 19:29 Report Abuse
Sanakkiyan இந்த விஷயத்தை பேச பேச தி மு க வுக்குத்தான் மவுசு ஏறும்.
Rate this:
Bala - chennai,இந்தியா
25 மார், 2019 - 18:31 Report Abuse
Bala மக்களே உஷார் உஷார் உஷார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது தமிழ்நாட்டின் சின்மயி விவகாரத்தில் வெளிவராத கோவம், தன்னுடைய மகனுடன் நடித்த நயன்தாரா விவகாரத்தில் பொங்கி எழுகிறார். இரட்டைவேடம் இரட்டைவேடம், இரட்டைவேடம். திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள். மக்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
southindian - chennai,இந்தியா
25 மார், 2019 - 18:13 Report Abuse
southindian STALIN OTTU VANGA STUNT ADITHUVITTAR
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in