Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு

24 மார், 2019 - 14:25 IST
எழுத்தின் அளவு:
radharavi-talks-contraversy-about-nayanthara

மீடூ சர்ச்சையில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த விவ காரம் விஸ்வரூபமெடுத்தது. குறிப்பாக, டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதாரவி அவர் சந்தா கட்ட வில்லை என்று அவரை யூனியனில் இருந்தே நீக்கினார். அதையடுத்து சின்மயி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து அவரது நீக்கம் தடை செய்யப்பட்டது.

இப்படியான நிலையில், நேற்று இரவு சென்னையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயாதான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது.


பார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று ராதாரவி பேசினார்.


ஆனால் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியதை அடுத்து, ராதாரவியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. குறிப்பாக, பாடகி சின்மயி, ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலை தளத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (39) கருத்தைப் பதிவு செய்ய
நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ரைசாநாய்க்குட்டிக்கு முத்தம் ... பிரிமியர் லீக் போட்டியை காண வந்த ரஜினிகாந்த் பிரிமியர் லீக் போட்டியை காண வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (39)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26 மார், 2019 - 12:44 Report Abuse
Matt P
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26 மார், 2019 - 12:42 Report Abuse
Matt P வாய் கொழுப்பு சேலையில் வடியுது என்பார்கள் /இவனுக்கு ரொம்பவே வடியுது . இவன் முதலில் திமுகவில் சேர்ந்த நேரம் ..அப்போது இவர் ஜெயலலிதாவை பேசாத பேச்சா?அப்பபோதெல்லஆம் திமுகவுக்கு தெரியவில்லையா? பெண்னின் பெருமை பற்றி ...குருவி இருக்க பநம் பழம் விழுந்தது போல ...நீக்குவதற்கு வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்கள் .திரையில் நடித்த ஒருவர் திரையில் நடிக்கிற இன்னொருவரை மதிக்க தெரியாத இவரெல்லாம் ..ஒரு மனிதர் .
Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
25 மார், 2019 - 20:29 Report Abuse
Roopa Malikasd Radha Ravi சொன்னதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை
Rate this:
balaji - chennai,இந்தியா
25 மார், 2019 - 17:46 Report Abuse
balaji
Rate this:
J sundarrajan - Coimbatore,இந்தியா
25 மார், 2019 - 13:32 Report Abuse
J sundarrajan மார்க்கெட் போனவனெல்லாம் இப்படி ஏதாவது உளறிக்கிட்ருந்தா தான் ந்யுஸ்ல இருக்கமுடியும்.
Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in