Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உறியடி 2 டீசர் வெளியீடு

23 மார், 2019 - 15:16 IST
எழுத்தின் அளவு:
Uriyadi2-Teaser-out

2016ல் உறியடி என்ற படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் விஜய்குமார். உறியடி சுமாரான வெற்றியைப் பெற்றாலும் பல தரப்பினருடைய பாராட்டைப்பெற்ற படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

விஜய்குமார் ஹீரோவாகவும், கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளார்.

இப்போது சமூகத்தில் நிலவும் சாதிப்பிரிவினை பிரச்னையை தான் உறியடி 2 பேசப்போகிறது. 36 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இன்று வெளியானது.

43 விநாடிகள் ஓடும் இந்த டீசரில், "சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம், சகலமும் அவலமாகும், மனித தன்மை கேள்விக்குறியாகும், பொறுமைகாத்தால் உடமை பறிப்போகும், உரிமைக்காக போராடுவதே நமது கடமை, அரசியலில் நாம தலையிடணும், இல்லைன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில் தலையிடும்" என பவர்புல் வசனம் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த டீசர், சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது.





Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர்பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் ... மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in