Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் கவனத்தை ஈர்க்க சுசீந்திரன் டுவீட்?

18 மார், 2019 - 13:12 IST
எழுத்தின் அளவு:
Suseenthiran-tweet-abou-ajith

சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் இருவர் பற்றி சினிமா பிரபலங்கள், டிவி பிரபலங்கள், அல்லது வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் பேசினாலோ, ஒரு டுவீட் போட்டாலோ உடனே அதை 'டிரென்ட்' செய்வதை அவரவர் ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

யாராவது அவர்களின் கவனத்தையும், மீடியாக்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைத்தால் அவர்களைப் பற்றி தும்மினாலே போதும் உடனே அது டிரென்ட் ஆகிவிடும் நிலைதான் உள்ளது.

இயக்குனர் சுசீந்திரன், ஒரு காலத்தில் 'வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா' உள்ளிட்ட சிறந்த படங்களைக் கொடுத்தவர். சமீப காலமாக தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வருகிறார். அவருக்கு முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரை வைத்து படம் இயக்க முடியவில்லை என்பதில் பலத்த வருத்தம் உண்டு. அதைப் பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென இயக்குனர் சுசீந்திரன், நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு டுவீட்டைப் பதிவிட்டார். உடனே, பலரும் அதற்கு ஆதரவாகவும், எதிர்பார்ப்பாகவும் கமெண்ட்டுகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்” என டுவிட்டரில் டிரென்ட் ஆகும் அளவிற்கு விவகாரம் காரசாரமாகப் போனது. சுசீந்திரன் பதிவிட்ட கருத்து அவருக்கு இலவசமாக பெரிய விளம்பரத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
25 நாட்களைக் கடந்த எல்கேஜி, டுலெட்25 நாட்களைக் கடந்த எல்கேஜி, டுலெட் டியர் காம்ரேட் டீசர் வெளியீடு டியர் காம்ரேட் டீசர் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in