Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எமி ஜாக்சன் நாட்டிலிருந்து டெய்ஸி எட்கர் ஜோன்ஸ்

18 மார், 2019 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Daisy-Edgar-jones-from-England

2010ல் வெளிவந்த 'மதராசபட்டிணம்' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்சன். அதன்பின் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். விரைவில் அவருடைய காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

எமி ஜாக்சன் வழியில் அடுத்து இங்கிலாந்து நாட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வர உள்ளவர் டெய்ஸி எட்கர் ஜோன்ஸ். ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக அவர் நடிக்க உள்ளார்.

சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய கதை என்பதால் படத்தில் உள்ள முக்கிய ஆங்கிலேயப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஆங்கிலேயே நடிகையையே அழைத்து வருகிறார் ராஜமௌலி.

2018ல் உருவான 'பான்ட் லைப்' என்ற படத்தில் நடித்துள்ளார், அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. உட்அவுஸ் கல்லூரியில் நாடகக் கலை பயின்றவர் டெய்ஸி. 14 வயதில் பிரிட்டனின் தேசிய இளைஞர் நாடகக் குழுவில் இணைந்தவர். வார் ஆப் த வேர்ல்ட்ஸ், கோல்ட் பீட், அவுட்நம்பர்ட், சைலன்ட் விட்னஸ் ஆகிய டிவி தொடர்களில் நடித்துள்ளார். ஐரிஷ், ஸ்காட்டிஷ் மக்கள் பேசும் ஆங்கில மொழி உச்சரிப்பிலும் அவர் சிறந்தவர் என்பதாலும் டெய்ஸியை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ராஜமவுலி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

எமி ஜாக்சன் போல டெய்ஸியும் பெயர் வாங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்கிறார் ஸ்ரீரெட்டிபாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ... செப்டம்பர் மாதம் விஷால் திருமணம் செப்டம்பர் மாதம் விஷால் திருமணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in