எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவருக்கு, அஸ்வின் என்பவர் உடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்கிறார். இவரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.
இவர்களது, திருமணம் பிப்., 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று(பிப்.,8) வரவேற்பு நடந்தது. இதில் இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் தெரிந்த பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பிப்., 11ம் தேதி, சென்னை லீலா பேலஸில் காலை 9.00 - 10.30 மணியளவில் திருமணம் நடக்கிறது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். மாலை 8.30 மணியளவில் மற்றுமொரு வரவேற்பு, ஆடம்பரமாய் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.