Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்.டி.ஆரின் இறுதி வாழ்க்கையை படமாக எடுக்கத் தயாரா? லட்சுமி பார்வதி கேள்வி

10 ஜன, 2019 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Parvathi-questioned-about-NTR-biopic

ஆந்திர முன்னாள் முதல்வரும், முதல் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாற்று படமான என்டிஆர் கதாநாயகுடு படம் நேற்று வெளிவந்தது. இந்தப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி, லட்சுமி பார்வதி நேற்று திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

என்.டி.ராமராவின் வாழ்க்கையை முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் என எத்தனை பாகங்கள் படமாக எடுத்தாலும் அதில் அவர் இறுதிக்கால வாழ்க்கையை காண்பித்தால் மட்டுமே அது முழுமையான படமாக இருக்கும். ஆனால் பாலகிருஷ்ணாவால் அவ்வாறு எடுக்க முடியாது. காரணம் அவ்வாறு எடுத்தால் அதில் சந்திரபாபு நாயுடுவை வில்லனாகவோ அல்லது என்னை வில்லியாகவோ காண்பிக்க வேண்டும். என்னை வில்லியாக காண்பித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.

என்டிஆர் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் படமாக காண்பித்தால், அது முழுமையான வாழ்க்கை படமாக இருக்காது. அவர் தனது வாழ்வின் கடைசி காலத்தில் சிலரால் துரோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறிய வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு தனது வாழ்க்கையை நடத்தினார். மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் வாழ்ந்த என்.டி.ராமராவ், தனது இறுதி நாளில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட பிறகு குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்துடன் என்னை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சந்திரபாபு நாயுடு அவரது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக குடும்பத்தில் உள்ள அவரது பிள்ளைகளை பிரித்து எனக்கு எதிராக செயல்பட வைத்து அவருக்கு அவப்பெயரை உண்டாக்கி துரோகம் செய்தார். தொடர்ந்து 23 ஆண்டுகளாக என்.டி.ஆரின் பாதையில் போராடி வருகிறேன்.

பதவிக்காகவோ, பணத்திற்காகவோ நான் ஆசைபட்டதில்லை. ராம் கோபால் வர்மா எடுக்கக்கூடிய லட்சுமிஸ் என்.டி.ஆர். திரைப்படம் வெளி வந்தால் மட்டுமே என்.டி.ஆரின் வாழ்க்கை சரித்திரம் முழுவதுமாக வந்ததாக கருதப்படும். இருப்பினும் பாலகிருஷ்ணாவும் எனது மகன் என்பதால் அவரின் படத்திற்கு எனது ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மெரினா புரட்சி சான்று : 7 நாளில் முடிவெடுக்க கோர்ட் உத்தரவுமெரினா புரட்சி சான்று : 7 நாளில் ... நார்வே திரைப்பட விழா: விஜய் சேதுபதி, த்ரிஷாவுக்கு விருது நார்வே திரைப்பட விழா: விஜய் சேதுபதி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
10 ஜன, 2019 - 12:08 Report Abuse
Nallavan Nallavan எடுத்தா நீதான் சிக்குவ .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in