'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'பாகுபலி' என்ற படத்தை இயக்கியதன் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராஜமவுலி. அந்தப் படம் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாலேயே அவருக்கு இத்தனை பெரிய வரவேற்பு.
இந்நிலையில், அவர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜமவுலியிடம், 'தமிழில் திரைப்படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். அந்தப் படத்தில் ரஜினி, கமல் யாரை நடிகராக்க வேண்டும் என விரும்புவீர்கள். அதாவது, தமிழ் திரைப்பட நடிகர்களில் யாரை உங்கள் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்?' என கேட்டுள்ளனர்.
அதற்கு பட்டென பதில் அளித்த ராஜமவுலி கூறியது - ரஜினியின் பெயரை தான். இந்தப்பேட்டி மட்டுமல்ல, ராஜமவுலியின் பல பேட்டிகளில் ரஜினியை இயக்கவே விரும்புவதாக கூறி வருகிறார். அது நடக்குமா.?