'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |
துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விபசார கும்பல் கிண்டி பகுதிக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் இதுபற்றி நடத்திய விசாரணையில் பிரபல அம்மா நடிகை சோபனா (40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் நடிகை சோபனாவிடம் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பேசுவதுபோல பேசினார்கள். பின்னர் உல்லாசமாக இருக்க சோபனா கேட்ட தொகையுடன் சோபனா சொன்ன இடத்துக்கு மாறுவேடத்தில் போலீசார் சென்றனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பிறகு நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து துணை நடிகைகள் இருவர் வந்தனர். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை கைது செய்தனர். இதையடுத்து சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.




