நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய மில்லினியர்களில் ஒருவரும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமண விழா நவ.,16-ல் நடக்க இருக்கிறது. இந்தியாவிலேயே ஆடம்பரமான திருமணமாக இது இருக்கப்போகிறது. அழைப்பிழுக்கு மட்டும் கோடி கணக்கில் செலவிடுகிறார்கள். ஒரு அழைப்பிதழின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு திருமணத்துக்கு முந்தைய நலுங்கு சடங்குகள் நடந்தது. இதில் ரெட்டி குல வழக்கப்படி பெண்கள் ஆடிப்பாடுவது வழக்கம். மணமகளை குதூகலப்படுத்துவதற்காக இப்படி செய்வதுண்டு.
தென்னிந்திய மொழிகளிலிருந்து மணமக்களை வாழ்த்தும் 40 திரைப்பட பாடல்கள் தொகுக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடல் ஒலித்தபோது தமிழ் நடிகைகள் சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனமாடினர். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. நடனம் ஆடுதற்காகவே பெரும் தொகை சம்பளமாக கொடுத்து இவர்கள் அழைத்து வரப்பட்டனர் என்று ஒரு சாராரும், மணவீட்டாரின் அழைப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியால் ஆடினார்கள் என்று ஒரு சாராரும் தெரிவிக்கிறார்கள்.