
அரசன்க்கு அடுத்து சிம்புவை இயக்கும் கீர்த்தீஸ்வரன்!
"தக்லைப்" படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் "அரசன்" படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அவருடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தீபாவளிக்கு அரசன் படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் அரசன் படத்திற்கு பிறகு "டிராகன்" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பார் என்று ஏற்கனவே செய்திகளை வெளியாகி வந்தன. ஆனால் தற்போது "டியூட்" படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடிக்க போகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!