நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தான் ஆட்சியைப் பிடித்தார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் விஜய் முதல்வரான பின் தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலன் பாலோயர்கள் கடகடவென உயர்ந்து தற்போது 3 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளது.
விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு முன்பு ஸ்டாலின் முதல்வராக இருந்த போது அந்த பக்கத்தை 4 லட்சத்திற்கு அதிகமான பாலோயர்கள் மட்டுமே பின் தொடர்ந்துள்ளனர்.
விஜய் முதல்வராகப் பதவியேற்ற 48 மணி நேரத்தில் அது 2 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளது. தற்போது 3 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே இன்ஸ்டா தளத்தில் அதிக பாலோயர்களைக் கொண்ட இரண்டாவது முதல்வர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் 3.9 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கிறார். அதையும் விஜய்யின் இன்ஸ்டா பக்கம் சீக்கிரமே கடந்து முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.