Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா?

19 மே, 2026 - 04:58 IST
எழுத்தின் அளவு:
Is-it-criticism-for-simply-going-on-a-plane
Advertisement


நடிகர் கமல்ஹாசன் கல்கி2898 ஏடி படத்துக்காக விமானத்தில் பிஸினஸ் கிளாசில் பயணம் செய்யாமல், எகானமி கிளாசில் பயணம் செய்யும் ஒரு போட்டோ நேற்று வைரல் ஆனது. சினிமா படப்பிடிப்பு செலவை குறைக்க, எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்த இப்படி கமல்ஹாசன் பயணம் செய்கிறார். அவர் நினைத்து இருந்தால் தனி விமானத்தில் படப்பிடிப்பு வருவதாக அறிவித்து இருக்கலாம். அப்படி செய்யவில்லை என படக்குழு பெருமையாக அறிவித்தது.

ஆனாலும், அந்த போட்டோவை பார்த்து பலரும் கமல்ஹாசனை விமர்சனம் செய்தனர். அந்த போட்டோ ட்ரோல் ஆனது. கல்கி படத்துக்காக பல கோடி சம்பளம் வாங்குகிறார் கமல்ஹாசன். அதை குறைத்து இருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. படப்பிடிப்புதளத்துக்கு எகானமி கிளாசில் செல்வதை விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். செலவை குறைக்க நினைத்தால் அவர் ரயிலில் சென்று இருக்கலாம்.

ஸ்டார் ஓட்டலில் தங்குவதை தவிர்த்து சாதாரண ஓட்டலில் தங்கலாம். தனது டீம் செலவை, சம்பளத்தை குறைக்கலாம். அதை விடுத்து சில ஆயிரம் செலவை தவிர்த்து எகானமி கிளாசில் செல்வதை விளம்பரம் செய்வதா என நெட்டிசன்கள் கிண்டல் கலந்த விமர்சனத்தை வைக்கிறார்கள். சின்ன ரோலில், கொஞ்ச நேரம் வந்தாலும் இந்த படத்துக்காக கமல் வெயிட்டான சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும்83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் ... சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap