நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

வைணவத் துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான ராமானுஜரைப் பற்றி ஒரு திரைப்படமோ தொடரோ உருவாக்கப்பட வேண்டும் என்பது திராவிடர் கழக நிறுவனர் ஈ.வே. ராமசாமியின் பெரிய கனவாக இருந்தது. 'அக்ரகாரத்து அதிசய மனிதர்' என்று ராமானுஜரை புகழ்ந்தவர் அவர்.
அவரின் ஆசைக்கு இணங்க சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான வா.ராமசாமி ஐயங்கார், ராமானுஜரைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். அத்திரைப்படத்திற்கான பாடல்களை திராவிட இயக்கத்தின் கவிஞரான பாரதிதாசன் எழுதியிருந்தார். அப்போதே, பாரதிதாசன் ஒரு இந்து சாமியார் படத்திற்குப் பாடல்கள் எழுதுகிறார் என்று அவர் மீது கடும் விமர்சனம் இருந்தது.
ஏ.நாராயணன் இயக்கத்திலும் மீனாட்சி நாராயணனின் ஒளிப்பதிவிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கு சுப்பிரமணியம், ந.ராமரத்னம் போன்ற பத்திரைக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் நடித்து அவர்களின் கூட்டு முயற்சியால் வெளியானது.
படத்தின் கதை வசனம் போன்றவை நன்றாக இருந்தாலும் நடித்தவர்களின் தோற்றம் கேரக்டர்களுக்கு பொருந்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ராமானுஜர் வேடத்தில் நடித்த சங்கு சுப்பிரமணியம் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், இதனால் படம் தோல்வியடைந்தது. 1939ம் ஆண்டு வெளியான இந்த படமே ராமானுஜர் வாழ்க்கை பற்றிய முதல் படம் என்று கூறப்படுகிறது.