ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

தமிழகத் தேர்தல் முடிவுகள் வந்து நடிகர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற பிறகு திரையுலகினர் பலரும் அவரை சந்திக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள், இயக்குனர் விக்ரமன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் மட்டுமே அவரை சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
முதல்வர் விஜய்யை சந்திக்க அனுமதி கேட்டு பல சினிமா பிரபலங்கள் தொடர்பு கொண்டு வருவதாகத் தகவல். அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகே அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படலாம் எனச் சொல்கிறார்கள். இருந்தாலும் முக்கிய சினிமா பிரபலங்களை மட்டுமே அவர் சந்திக்க அனுமதி கொடுக்கலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும் சில சினிமா பிரபலங்கள் சந்தித்து வருகிறார்கள். நடிகர் சங்கத் தலைவர் நாசர், முதல்வர் விஜய்யை சந்தித்த பின் அப்படியே ஸ்டாலினையும் சந்தித்தார். அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் நேற்று அவரை சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பு குறித்து, “பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.