பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் |

கடந்த 2022ம் ஆண்டில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'கட்டா குஸ்தி'. இதன் 2ம் பாகத்தை வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷாலின் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்னைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், இதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. 'சம்பாரிக்கிறது மட்டும் வேலை இல்ல.. வீட்டை சமாளிக்கிறதும் புல்டைம் வேலை தான்..' எனக் குறிப்பிட்டு ஜூலை 3ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.