ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முந்தைய சங்கத்தில் பொறுப்பில் இருந்த பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் பெரும்பாலானோர் மீண்டும் புதிய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். அந்த வகையில் 'திரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்த அன்சிபா ஹாசன், தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே இணைச் செயலாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்கிற தகவலைச் சங்கத்தின் தலைவர் ஸ்வேதா மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது பணிச்சுமைகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தான் இந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அன்சிபா ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 21ம் தேதியே அன்சிபா ஹாசன் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்து விட்டதாகவும், ஆனால் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்குப் பிறகுதான் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.