
6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம்
2008ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் "சிலந்தி". முன்னா, மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் தெலுங்கில் "எர்ர குலாபி"என்றும், இந்தியில் "ஜால் - தி நெட்" என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் இப்படமானது கன்னடத்தில் விஜய் ராகவேந்திரா, ஹரிப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க "ரணதந்திரா" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. புதுமண தம்பதிகள் ஜாலியாக இருக்க ஒரு தனிமையான ரிசார்ட்க்கு செல்லும்போது அங்கு அவர்கள் சந்திக்கும் விநோத பிரச்னைகள்தான் கதை.
தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை தயாரித்த ஜி கம்பெனி சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க எழுதி இயக்குகிறார் ஆதிராஜன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் உருவாகிறது. மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. கம்போடியா மற்றும் சீனாவில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!