ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

பார்த்திபன், இயக்கி, நடித்த முதல் படம் 'புதிய பாதை'. புதிய பாதை கதையை எழுதிவிட்டு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது சுந்தரம் என்ற பத்திரிகையாளர்தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். 40 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டு 38 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்க ரஜினியைத்தான் நினைத்திருந்தார் பார்த்திபன். ஆனால் அப்போது ரஜினியின் சம்பளமே 50 லட்சத்திற்கு மேல் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு தானே நடித்தார். குஷ்புதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது வீட்டுக்கு சென்று கதை சொன்னார். கதை குஷ்புவிற்கு மிகவும் பிடித்து நடிக்கவும் ஒப்புக் கொண்டார். பிறகு படத்தின் சில டயலாக்குகளை கொடுத்து பேசச் சொன்னார். ஆனால் அவரது வசன உச்சரிப்பில் இந்தி வாசனை இருந்தது. அதோடு அவரது தோற்றமும் வடஇந்திய பெண்ணாக இருந்ததால் அவரை நிராகரித்தார்.
பிறகுதான் சீதாவை தேர்வு செய்தார். சீதாவை கண்டதுமே காதல் கொண்டார். இதனால் படத்தில் தனது கேரக்டர் பெயரையே சீத்தாராமன் என்று மாற்றினார். பின்னர் காதலித்து திருமணமும் செய்தார்.