Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி'

13 மே, 2026 - 11:03 IST
எழுத்தின் அளவு:
2026---Thaai-Kizhavi-tops-the-charts-in-terms-of-collections-and-profits
Advertisement


2026ம் ஆண்டின் நான்கு மாதம் கடந்து போய்விட்டது. இந்த நான்கு மாதங்களில் வெளியான படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாக அமைந்தது. அவற்றில் 'தாய் கிழவி, யூத், வித் லவ், தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய படங்கள்தான் லாபகரமான படங்களாகவும் அமைந்தது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'பராசக்தி' படம் 100 கோடி வசூல் தந்த படமாக இருந்தாலும் அந்தப் படம் லாபகரமான படமாக அமையவில்லை. அந்தப் படம் தவிர வேறு எந்தப் படமும் இதுவரையில் 100 கோடி வசூலைக் கடக்கவில்லை.

இந்நிலையில் 'தாய் கிழவி' படம் 75 நாட்களில் 90 கோடி வசூலித்ததாக நேற்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் இந்த ஆண்டில் லாபகரமான வசூல் தந்த படங்களில் 'தாய் கிழவி' தான் முதலிடத்தில் உள்ளது.

இதற்கடுத்து 82 கோடிகளுடன் 'யூத்' படம் இரண்டாவது இடத்திலும், 'வித் லவ்' படம் 39 கோடிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவை அப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் கடைசியாக அறிவித்தவை.

'தாய் கிழவி' படத்தின் லாபகரமான வசூலை இந்த வருடத்தில் அடுத்து வர உள்ள படங்கள் முறியடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்…ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு ... பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap