லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து தற்போது புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் 'பெத்தி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிராமப்புற விளையாட்டு கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஜூன் நான்காம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் 'பெத்தி' படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் குறிக்கும் ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ஒரு துள்ளலான வேடத்தில் நடித்திருக்கிறேன். கதைப்படி இந்த படத்தில் எம்எல்ஏவாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் என்பவரின் மகளாக அச்சியம்மா என்ற வேடத்தில் நடித்துள்ளேன். ராம் சரணுடனான ரொமான்டிக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடிப்பதற்கான வாய்ப்புகள் இப்படத்தில் கிடைத்திருக்கிறது. அதனால் இந்த படம் தெலுங்கு சினிமாவில் எனக்கு ஒரு நிலையான மார்க்கெட்டை பிடித்து தரும் என்று எதிர்பார்க்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் ஜான்வி கபூர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ஜெகபதிபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.