லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

தமிழ் சினிமாவில், ஏன் மொத்த இந்திய சினிமாவிலேயே ஆயிரம் படங்களில் நடித்தவர்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலர் மட்டுமே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை ஆச்சி மனோரமா. மற்ற எந்த நடிகர்களுக்கும் கிடைக்காத இன்னொரு பெருமை என்னவென்றால், இவர் ஆறு முதல்வர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றியவர் என்பதுதான்.
ஆரம்ப கால மேடை நாடகங்களில் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடனும் எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா போன்றவர்களுடன் திரைப்படங்களிலும் நடித்த மனோரமா, கருணாநிதி கதை எழுதிய 'ஒரே ரத்தம்' என்ற திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று இருப்பதன் மூலம், மனோரமா தற்போது ஏழு முதல்வர்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்கிற சாதனைக்கு உயர்ந்துள்ளார். விஜய்யுடன் 'ரசிகன்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த மனோரமா, அதிக அளவு படங்களில் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மறைந்தும் கூட ஒரு புதிய சாதனையை ஆச்சி மனோரமா சொந்தமாக்கி இருப்பதும், அதற்கு விஜய் காரணமாக அமைந்திருப்பதும் யாரும் எதிர்பாராத ஒன்று.