Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம்

11 மே, 2026 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Flashback-Sivajis-film-failed-due-to-script-lapses
Advertisement

1959ம் ஆண்டு, சிவாஜி, அஞ்சலி தேவி நடிப்பில் வெளிவந்த படம் 'நான் சொல்லும் ரகசியம்'. பி.ஸ்ரீதர் ராவ் இயக்கியிருக்கிறார். இசை ஜி.ராமனாதன். படத்தின் கதை அருமை, ஆனால் திரைக்கதை சொதப்பல் காரணமாக படம் தோல்வி அடைந்ததாக அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது

பணக்காரர் தங்கவேலுவின் மகன் சிவாஜி. ஆனால் சிவாஜிக்கு பணக்காரத்தனமான வாழ்கை பிடிக்கவில்லை. இதை பயன்படுத்தி சிவாஜியின் தம்பி எஸ்.ஆர்.தசரதன் முழு சொத்துக்களையும் அபகரிக்க நினைக்கிறார். ஒரு நாள் விட்டை விட்டு வெளியேறும் சிவாஜி ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் மயங்கி விழுகிறார். அங்கே வரும் திருடர்கள் அவரது விலை உயர்ந்த ஆடையை திருடிச் சென்று விடுகிறார்கள்.

கண் விழிக்கும் சிவாஜி சைக்கிள் ரிக்ஷாவில் இருக்கும் பழைய கந்தலான உடையை அணிந்த கொள்கிறார். மறுநாள் அவரை ரிக்ஷாக்காரனாக நினைக்கும் நாயகி அஞ்சலிதேவி ரிக்ஷா சவாரிக்கு அழைக்கிறார். அவரும் செல்கிறார். அந்த எளிய வாழ்க்கை அவருக்கு பிடித்துப்போகிறது. குடிசை பகுதியில் வாழ்கிறார். பின்னர் அஞ்சலி தேவியை காதலிக்கிறார்.

அஞ்சலி தேவிக்கும், அவரது தந்தைக்கும் பணக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி பணக்காரர் என்று தெரியவரும்போது என்ன நடக்கிறது. மகனை பற்றி கேள்விப்படும் தந்தை தங்கவேலு 'நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள் அஞ்சலிதேவி மட்டும் வேண்டாம்' என்கிறார். இந்த இரண்டுக்கும் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது, அது என்ன என்பததான் படத்தின் முக்கிய பகுதி.

படத்தில் சந்திரபாபு, தங்கவேலு தொடர்பான காமெடி காட்சிகள் நன்றாக வந்திருந்ததால் அந்த காட்சிகளை அதிகரித்து முக்கிய காட்சிகளை குறைத்து விட்டார்கள். சிவாஜி ரிக்க்ஷகாரனாக இருக்கும் போர்ஷன் நன்றாக இருந்ததால் கதையை விட்டு படம் விலகி சென்றது. இப்படியான பல திரைக்கதை சொதப்பல்களால் படம் படுதோல்வி அடைந்தது. நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை சரியாக அமையாவிட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படம் இப்போதும் ஒரு உதாரணமாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள்சிறப்பு காட்சி பார்த்துவிட்டு ... பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap