ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி |

நடிகை சாய் பல்லவி தொடர்ந்து கனமான கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது முதல் முறையாக ஹிந்தியில் 'ஏக் தின்' படம் மூலமாக அடியெடுத்து வைத்துள்ளார். அமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை அமீர்கானின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமே தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் முழு காப்பியைப் பார்த்த போதுதான், இந்தத் கதாபாத்திரத்திற்குத் தான் செட்டாகவில்லை என்று உணர்ந்ததாகக் கூறியுள்ள சாய் பல்லவி, "இன்னும் கொஞ்சம் ஆடம்பரமான அல்லது துடிப்பான தோற்றம் கொண்ட ஒரு புதிய நடிகை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அமீர் கானிடமே கூறினேன்" என்றும் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆனால் உடன் நடித்த நாயகன் ஜுனைத் கான், "சாய் பல்லவி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்; இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமான தேர்வு. குறிப்பாக மது அருந்தும் காட்சியில் சாய் பல்லவி மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தார்" என குறிப்பிட்டு ஜுனைத் கான் அவரைப் பாராட்டியுள்ளார். அந்த வகையில் தனது அபாரமான நடிப்பால் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியான தேர்வு என சாய் பல்லவி நிரூபித்துள்ளார் என்றும் ஜுனைத் கான் கூறியுள்ளார்.