'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

டில்லியை சேர்ந்த ரித்திகா நாயக் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. 'அசோக வனமுலு அர்ஜுனா கல்யாணம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், நானி நடித்த 'ஹாய் நன்னா' மூலம் மேலும் புகழ் பெற்றார். தேஜா சஜ்சா, மஞ்சு மனோஜ் நடித்த 'மிராய்' படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோயின் ஆனார்.
இந்த நிலையில் தற்போது அவர் நிதின் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனங்களான சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இப்படம் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் ரித்திகா தெலுங்கில் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.