மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

'தி ராஜா சாப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ஒரு பக்கம் 'ஸ்பிரிட்', இன்னொரு பக்கம் 'பவுசி' ஆகிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வகையில் இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கத்தில் சமீபத்தில் பவுசி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படக்குழுவினரின் ஒருவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் விசாரணைக்காகவும் தற்காலிகமாக பவுசி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.