Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் அதிகாலை காட்சிகள்… அனுமதி கிடைக்குமா ?

05 மே, 2026 - 03:05 IST
எழுத்தின் அளவு:
Early-morning-scenes-again...-Will-permission-be-granted
Advertisement

தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள் என்பது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாளில் நடைபெறும் வழக்கம் இருந்தது. ஆனால், 2023ல் அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி விழுந்து இறந்து போனார். அதன்பின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தருவதை முந்தைய அரசு ரத்து செய்தது.

காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையிலான காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியான போது கூட எந்தவிதமான அனுமதியையும் தராமல் அதில் கண்டிப்பு காட்டி வந்தார்கள்.

அடுத்து விஜய் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. அவர் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தால் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இரவு 11 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் முடிவடைய அதிகாலை 2 மணி கூட ஆகிவிடுகிறது. அதற்கடுத்து அதிகாலை 5 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என திரையுலகினரும் எதிர்பார்ப்பதாகத் தகவல்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் : திரையுலகினரின் தொடர் வாழ்த்து மழையில் விஜய்வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் : ... மே 8ல் ஒரே ஒரு படம்தான் ரிலீஸ்? மே 8ல் ஒரே ஒரு படம்தான் ரிலீஸ்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

praba - madurai,இந்தியா
05 மே, 2026 - 06:05 Report Abuse
praba தேவையில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap