கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில், நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தொடங்குவதில் இன்னும் கால அவகாசம் ஏற்படும் என்பதால் இதற்கிடையில் மாரி செல்வராஜ் மற்றொரு படத்தை இயக்கலாம் என்கிற திட்டத்தில் உள்ளார்.
அதன்படி, கடந்த 2024ம் ஆண்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'வாழை' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக கதிர் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன், கயாடு லோகர் என இருவருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வாழை முதல் பாகத்தில் நடித்த நிகிலா விமல், வாழை 2ம் பாகத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், மாரி செல்வராஜ் 'வாழை 2' படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார் என தகவல் தெரிவிக்கின்றனர்.