இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

கடந்த வாரம் வெளியான புதுப்படங்களின் பட்டியல் மறைவதற்குள் இந்த வாரமும் பட்டியல் நீண்டு விட்டது. சர்ச்சையை ஏற்படுத்திய 'டிஎன்-2026' முதல் பல்வேறு புதிய படங்கள் இந்த வாரம் ரிலீசாகவுள்ளது.
டிஎன்-2026
நடிகர் தம்பி ராமையா மகன் உமாபாரதி தம்பி ராமையா இயக்கத்தில் நட்டி, சாந்தினி, தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'டிஎன் -2026'. இந்த படம் இன்று (ஏப்ரல் 30ம் தேதி) அமேசான் ப்ரைம், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆடு-3 (Aadu-3)
மலையாள இயக்குநர் மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் வினாயகன், செம்பன் வினோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஆடு-3(Aadu-3)'. இந்த படம் நாளை(மே 1ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
ராகாசா (Raakaasa)
தெலுங்கு இயக்குநர் மனசா ஷர்மா இயக்கத்தில் வெளிவந்த காமெடி திரைப்படம்' ராகாசா (Raakaasa)'. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் நாளை (மே.1ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சோதரா (Sodara)
தெலுங்கு இயக்குநர் மன்மோகன் மேனாம்பள்ளி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்' சோதரா (Sodara)'. காமெடி திரைப்படமான இந்த படம் நாளை (மே.1ம் தேதி) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
பைக்கர் (Biker)
தெலுங்கு இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் சர்வானந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ' பைக்கர் (Biker)'. இந்த திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை (மே.1ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மனிதன் தெய்வமாகலாம்
அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், இயக்குநர் செல்வராகவன், குஷி ரவி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. இந்த படம் நாளை (மே.1ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சோல் ட்ரீப் (Soul Trip)
தெலுங்கு இயக்குநர் விஜய் தட்லா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்'சோல் ட்ரீப்( soul trip)'. இந்த படம் இன்று(ஏப்.30ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பேட்ஜ்மெட்ஸ் (Batchmates)
தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் 'பேட்ஜ்மெட்ஸ் (Batchmates)'. இத்தொடர் இன்று(ஏப்ரல் 30ம் தேதி) தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகியுள்ளது.