கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தற்போது நடிகர் விஜய் சென்னையில் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பனையூரில் அவரது கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும், விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னணி இயக்குனராக இருந்தபோது
சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்பிஐ காலனியில் ஒரு வீடு கட்டியிருந்தார்.
விஜய் தனது சிறுவயதில் இருந்து அந்த வீட்டில்தான் வசித்து வந்தார். சினிமாவில் பிரபலமான பிறகும் நீண்டகாலம் அந்த வீட்டில் வசித்தவர், அதன் பிறகு நீலாங்கரையில் வீடுகட்டி அங்கு குடியேறி விட்டார். அதன்பிறகு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறினார். அதே வீட்டில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஒரு அலுவலகம் வைத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சாலிகிராமத்தில் உள்ள அந்த பழைய வீட்டை இடித்து அப்பார்ட்மென்ட் கட்டப் போகிறாராம் விஜய். இதன் காரணமாக தற்போது அந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்று விட்டார் விஜய் ஆண்டனி. அதே போல் எஸ்.ஏ.சியும் தனது அலுவலகத்தை அங்கிருந்து மாற்றி விட்டார். மேலும், சென்னை சாலிகிராமத்தில் விஜய் இன்னும் பல இடங்களில் வீடு அலுவலகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.