நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு பக்கம் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும் இன்னொரு பக்கம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான 'கேர்ள் பிரண்ட்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் 'மைசா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தை இயக்குனர் ரவீந்திரன் புல்லே என்பவர் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா பழங்குடி இனத்தைச் சேர்ந்த அதே துணிச்சல்மிக்க பெண்ணாக நடித்துள்ளார்.
இதனால் படத்தில் இவருக்கு ஆக்சன் காட்சிகள் உண்டு. தற்போது கேரளாவில் உள்ள அடர்ந்த காடு ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா நடிக்கும் ஆக்சன் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 15 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்காகவே பாங்காங்கில் தினசரி எட்டு மணி நேரம் பயிற்சி எடுத்த பிறகே இப்போது படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.