கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

கடந்த 2023ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் 'அயோத்தி'. இத்திரைப்படத்தை பார்த்த அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த இரண்டு வருடங்களாக இவரின் அடுத்த படத்தில் நடிக்க வைக்க தனுஷ், மாதவன், லாரன்ஸ் ஆகிய நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாக தகவல்கள் பரவியது.
ஒரு வழியாக மந்திர மூர்த்தியின் அடுத்த படம் உறுதியாகியுள்ளது. அதன்படி, மந்திர மூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மே மாத இறுதியில் மதுரையில் துவங்குகின்றனர். தொடர்ந்து 45 நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.