Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா?

22 ஏப், 2026 - 03:51 IST
எழுத்தின் அளவு:
Has-the-Ramadoss-biopic-been-shelved
Advertisement


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பற்றிய பயோபிக் படமாக 'அய்யா' படம் கடந்த வருடம் ஜுலை மாதம் அறிவிக்கப்பட்டது. சேரன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க படத்திற்கான சில போஸ்டர்களுடன் அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. படம் ஆரம்பிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து உறுதியான எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படத்தை விட்டுவிட்டு தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்கப் போகிறேன் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி ஆகியோர் பிரிந்ததுதான் இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்த ஜிகேஎம் தமிழ்க்குமரன் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தார். அவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது பென்னாகரம் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் குறித்தும், இவரது அப்பா ஜிகே மணி குறித்தும் அன்புமணி மகள்கள் சமீபத்தில் விமர்சித்திருந்தார்கள்.

இதனால், 'அய்யா' படம் இனிமேல் ஆரம்பமாகாது என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன்தமிழகத்தின் முதல் டால்பி ... மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap