Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: கே.பாக்யராஜ் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை

21 ஏப், 2026 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Flashback-Bollywood-actress-who-starred-opposite-K.-Bhagyaraj
Advertisement


பாலிவுட்டின் முன்னணி நடிகையான மீனாட்சி சேஷாத்திரி தமிழில் 'என் ரத்தத்தின் ரத்தமே' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் வெற்ற பெற்ற 'மிஸ்டர் இந்தியா' என்ற படத்தின் உரிமத்தை வாங்கிய கே.பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் மூலம் தமிழில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் அனில் கபூர் நடித்த கேரக்டரில் கே.பாக்யராஜூம், ஸ்ரீதேவி நடித்த கேரக்டரில் மீனாட்சி சேஷாத்ரியும் நடித்தனர். இவர்களுடன் சரத் சக்ஷேனா, கேப்டன் ராஜூ, ஜனகராஜ், சூர்யகாந்த் அகியோரும் நடித்தனர். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர்.

இந்த படத்தை கே.விஜயன் இயக்கி வந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது கே.விஜயன் இறந்ததால் அவரது மகன் சுந்தர் கே.விஜயன் மீதி படத்தை இயக்கினார். இந்தியில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழில் தோல்வி அடைந்தது.

இதனால் மீனாட்சி சேஷாத்திரி அதன் பிறகு நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.பாலச்சந்தரின் 'டூயட்' படத்தில் பிரபு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அண்ணன் பிரபுவும், தம்பி ரமேஷ் அரவிந்தும் மீனாட்சி சேஷாத்ரியை கதலிக்கும் கதை. 'என் ரத்தத்தின் ரத்தமே' படத்தில் கே.பாக்யராஜ் ஆட்டோ டிரைவராகவும், மீனாட்சி சேஷாத்ரி பத்திரிகையாளராகவும் நடத்திருந்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தின் மங்கத்தா 2 உருவாகிறதா? : வெங்கட்பிரபு படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பாரா?அஜித்தின் மங்கத்தா 2 உருவாகிறதா? : ... பிளாஷ்பேக்: முதல் காமெடி ஆடியோ ரிக்கார்ட் எது தெரியுமா? பிளாஷ்பேக்: முதல் காமெடி ஆடியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap