Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு

20 ஏப், 2026 - 05:05 IST
எழுத்தின் அளவு:
Madras-high-court-directs-issuance-of-no-caste,-no-religion-certificate-to-actor,-director-R-Parthiban
Advertisement


'உஸ்தாத் பகத்சிங்' என்ற தெலுங்கு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது 'நான் ஒரு தெலுங்கு நாயுடு' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் நடிகர் பார்த்திபன். அதையடுத்து அவரை நோக்கி பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தனக்கு 'சாதி மதம் அற்றவர்' என்ற சான்றிதழை வழங்க கோரி சென்னையில் உள்ள சோளிங்கநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி விண்ணப்பித்திருந்தார் பார்த்திபன். ஆனால் தேர்தல் பணிகள் காரணமாக அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் பார்த்திபன். அந்த மனு இன்று விசாரணை வந்தது. அப்போது நீதிபதி எம். தண்டபாணி, நடிகர் பார்த்திபனுக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை ஒரே வாரத்தில் வழங்க வேண்டும் என்று சோளிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு அவருக்கு அந்த சான்றிதழ் வழங்கியது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை வருகிற 29ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்!'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் ... பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Shekar - Mumbai,இந்தியா
23 ஏப், 2026 - 09:04 Report Abuse
Shekar எவ்வளவுதான் நடிச்சாலும் ஒன்னும் ஆவப்போறதில்லை
Rate this:
pck -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2026 - 05:04 Report Abuse
pck சான்றிதழ் வாங்குறது பெரிய விஷயம் இல்லை பார்த்திபன், கண்ட எடத்துல போய் நான் நாயுடு அப்பாயி, நான் மணவாடுநு சொல்ல கூடாது
Rate this:
21 ஏப், 2026 - 08:04Report Abuse
சந்திரசேகர் அதை சொன்னதாலாதான் எங்கே வருமானம் போயிடுமோன்னு பயந்து இப்போ புதுசா ஒரு வேஷம் ரியல் லைஃப் பில் போட்டு சரி பண்ண வேண்டியதிருக்கிறது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap