கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

கோட் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார் வெங்கட்பிரபு. இதற்கான பணிகள் ஓராண்டாக நடந்து வந்தது. அமெரிக்காவில் வைத்து சிவகார்த்திகேயனுக்கு கிராபிக்ஸ் டெஸ்ட் எல்லாம் நடந்தது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில் தற்போது இப்படம் டேக் ஆப் ஆகவில்லை. சிவகார்த்திகேயனின் கால்ஷீட், பட்ஜெட் உள்ளிட்ட பிரச்னைகளால் இப்படம் டிராப் என்று கூட செய்திகள் வருகின்றன. ஆனால் இதை படக்குழு யாரும் உறுதி செய்யவில்லை. வெங்கட்பிரபு வேறு படத்தை இயக்க போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக அவர், நடிகர் பிரதீப் ரங்கநாதனை அணுகி பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.