சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

தமிழில் எங்கேயும் எப்போதும், வலியவன், ராங்கி ஆகிய படங்களை இயக்கியவர் எம்.சரவணன். இவரது இயக்கத்தில் கடைசியாக 2023ம் ஆண்டில் 'நாடு' என்கிற படம் வெளியானது. அதன்பிறகு தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சரவணன் இயக்குனராக திரும்புகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதை சரவணன் தான் இயக்குகிறார் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்யஜோதி தயாரிப்பில், ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பதாக அறிவித்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




