தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான 'தொடரும்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 230 கோடிக்கு மேல் வசூலித்த இப்படத்தில் ஷோபனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இயக்குனர் தருண் மூர்த்தியின் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடத்து வருகிறார் மோகன்லால். அவரது 366வது படமாக இது உருவாகி வருகிறது. இந்த படத்தில் 'லவ் லாஜன்' என்கிற வித்தியாசமான பெயர் கொண்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு 'அதிமனோகரம்' என டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மோகன்லால் சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டர் அதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது.