சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் |

தவெக தலைவர் விஜய் நடிப்பில் தயாரான அவரது கடைசிப்படமான 'ஜனநாயகன்', சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட பல காரணங்களால் வெளிவராமல் உள்ளது. இச்சூழ்நிலையில், படம் இணையத்தில் கசிந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சைபர் கிரைம் போலீசார், 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கசிந்த ஜனநாயகன் படம் கோவையில் உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக பழனிசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால், விசாரிக்கப்படும் என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி கூறியுள்ளார்.