'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

'அப்பா ..வேணாம்ப்பா', 'அதையும் தாண்டி புனிதமானது' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆர்.வெங்கட்டரமணனின் அடுத்த படம் முதற்கனல். புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் கூறியது: 'அப்பா வேணாம்ப்பா' படத்தில் மதுவினால் ஒரு குடும்பம் எந்த அளவிற்கு சீரழிகிறது என்பதை சொன்னேன். இந்த படத்தில் போதைப்பொருள் கலாசாரத்தால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது, மற்றும் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையப்படுத்தி உள்ளேன். போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது பள்ளி செல்லும் இளைஞர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு போகும் வயதில் இருப்பவர்கள் என பலரும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தங்களையே தொலைத்துவிட்ட அவலத்தை கண்கூடாக பார்த்தேன்.
இந்த விஷயத்தையே ஏன் படமாக எடுக்க கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவாகத் இந்த படத்தை உருவாக்கினேன். போதை வஸ்துக்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதாலும் யாரும் அறியாமல் பயன்படுத்துவது எளிது என்பதாலும் இதன் பிடியில் பலர் சுலபமாக சிக்குகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல், அதனால் ஒவ்வொரு குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம்.'' என்கிறார்.