Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே?

14 ஏப், 2026 - 03:31 IST
எழுத்தின் அளவு:
When-is-JanaNayagan-releasing-Are-all-3-directors-busy
Advertisement


'ஜனநாயகன்' படம் லீக் ஆகிவிட்டதால் அந்த படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்துக்கு கடும் இழப்பு. அதை ஈடுகட்ட, அவர்களுக்கே மீண்டும் கால்ஷீட் கொடுத்து விஜய் மீண்டும் நடிக்கப்போகிறார். அந்த படத்தை லோகேஷ் கனகராஜ், அட்லி அல்லது நெல்சன் இயக்க வாய்ப்பு என்று சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தால், ''இன்னமும் அவர் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. இப்போது நடிக்க வருகிறேன் என்று சொன்னால் அது தேர்தல் பிரசாரத்தை, ஓட்டு விகிதத்தை பாதிக்கும். எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வார்கள். அவர் தேர்தலில் தோற்பது உறுதி. அதனால் மீண்டும் நடிக்கப்போகிறார் என்பார்கள். அதனால், அமைதி காக்கிறார். ஒருவேளை ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுவிட்டால் அவர் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நஷ்டஈடு தர வேண்டியது இல்லை. அவர் நடிப்பது ஜனநாயகன் ரிசல்ட்டை பொறுத்து இருக்கிறது.

விரைவில் ஜனநாயகனை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. ஏற்கனவே படம் 3 மாதம் லேட். இப்போது முழு படமும் லீக் ஆகிவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெற முடியும் என்பதால் அதன்பிறகே ரிலீஸ் ஆகும். இன்னமும் தாமதித்தால் அது இன்னும் ஆபத்து என படத்தின் தயாரிப்பாளரிடம் வினியோகஸ்தர்கள் பேசி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் சென்சார் சான்றிதழை வாங்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

மேலும், முன்பு போல அதிக விலைக்கு படத்தை வாங்க முடியாது. ஜனநாயகன் லீக் ஆனதால் எவ்வளவு வசூலிக்கும் என தெரியாது. ஆகவே, குறைந்த விலைக்குதான் படத்தை வாங்கி, ரிலீஸ் செய்வோம். பழைய வியாபாரத்தை மறந்திடுங்க என்று பல வினியோகஸ்தர்கள் கேவிஎன் நிறுவனத்திடம் பேசி வருகிறார்களாம். இதற்கிடையே, விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படும் லோகேஷ் கனகராஜ் 'டிசி' எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து 'கைதி 2', அல்லுஅர்ஜூன் படம் ஆகியவற்றை இயக்கப்போகிறார். அட்லி இப்போது அல்லு அர்ஜூன் படத்தை இயக்கி வருகிறார். 'ஜெயிலர் 2' படத்தை இயக்கி வரும் நெல்சன், அடுத்து கமல், ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். விஜய் உடனடியாக கால்ஷீட் கொடுத்தாலும் அவர்கள் படத்தை இயக்குற நிலையில் இல்லை'' என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்'ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ... ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap