Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நயன்தாரா மீது எழும் விமர்சனங்கள்

13 ஏப், 2026 - 03:54 IST
எழுத்தின் அளவு:
If-you-get-blood,-we-get-tomato-chutney-Criticisms-against-Nayanthara
Advertisement


விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்திஷெட்டி நடித்த 'எல்ஐகே' படம் வெளியாகி, சுமாராக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ், லலித்குமார் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். பட புரமோஷன் பணிகளை விக்னேஷ்சிவன், ரவுடிபிக்சர்ஸ் டீம்தான் கவனித்தது. பொதுவாக, தான் நடிக்கும் பட விழாக்களில் நயன்தாரா கலந்து கொள்ளமாட்டார், தான் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டுவிழா, புரமோஷன்களுக்கு நயன்தாரா வரமாட்டார். தனது படம் குறித்து பேட்டி கொடுக்கமாட்டார். இதை பாலிசியாக வைத்து இருந்தார்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் நயன்தாரா நடித்தாலே பெரிய விஷயம் என்ற மனநிலையில் இருந்தார்கள். நயன்தாராவின் இந்த பாலிசியை யாரும் தட்டி கேட்டது இல்லை. பல ஆண்டுகளாக இந்த போக்கு தொடர்ந்தது. அதேசமயம், எல்ஐகே படத்திற்காக கடந்த வாரம் சென்னையில் நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டில் நயன்தாரா கலந்துகொண்டார். அவர் மேடையில் பேசாவிட்டாலும், மேடையில் ஏறி கணவனுக்கு சப்போர்ட் செய்தார். பின்னால் கேரவனில் இருந்து அந்த விழாவை ஒருங்கிணைத்தார்.

எல்ஐகே படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ அதிகமாக, சமீபத்தில் சென்னை கமலா தியேட்டருக்கு தனது கணவன், இயக்குனரான விக்னேஷ்சிவனுடன் விசிட் அடித்தார். அதை வீடியோவாக வெளியிட்டு பப்ளிசிட்டிக்கு உதவினார். இப்படி எந்த படத்துக்கும் நயன்தாரா செய்தது இல்லை. தனது கணவர் வெற்றிக்காக இப்படி செய்கிறார். தனது பாலிசியை மாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதேபோல் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலகோடி முதலீடு போட்டு, வெற்றிக்காக ஏங்கினார்கள். அவர்கள் பலமுறை அழைத்தும் நயன்தாரா விளம்பர விஷயத்தில் உதவவில்லை. தனது கணவர் படம், தன் பணம் என்பதால் இப்படி மாறியிருக்கிறார். உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கிறார்கள். இனிமேலாவது தனது பட விழாக்களுக்கு எல்ஐகே பாணியில் வருவாரா என பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து? கமல் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்?ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் ... ஜனநாயகன் லீக் ; எடிட்டர் காரணமா... குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் : ஆர்கே செல்வமணி பேட்டி ஜனநாயகன் லீக் ; எடிட்டர் காரணமா... ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap