சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

2026ம் ஆண்டின் கடந்த வாரத்துடன் மொத்தம் 77 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. 4 படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகி உள்ளன.
ஐபிஎல் வந்தால் என்ன, தேர்தல் வந்தால் என்ன, தேர்வுகள் வந்தால் என்ன, கடும் வெயில் வந்தால் என்ன என ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வெளியாவது வழக்கமாகவே இருக்கிறது. கடந்த வாரம் ஐந்து படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா, சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' இந்த வார வெளியீட்டில் குறிப்பிடும் படமாக இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாகத் தயாரிப்பில் இருந்தது இப்படம். எந்த சத்தமும் இல்லாமல் படத்தை முடித்துவிட்டு, திடீரென கடந்த வாரம் பட வெளியீட்டை அறிவித்துள்ளார்கள்.
இந்தப் படத்துடன், “ஆதாரம், புரவியாட்டம், ரூம்பாய்” ஆகிய சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன. இன்னும் 10 நாளில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்தப் படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கப் போகிறதோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. தேர்தல் முடிந்த பிறகே தமிழ் சினிமா கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தும்.




