தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

தமிழில் தற்போது 'காக்கி சர்க்கஸ்' என்கிற வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. மலையாள இயக்குனரான அமீன் என்பவர் இந்த வெப் சீரிஸை இயக்கியிருந்தாலும் முழுக்க முழுக்க தமிழக பின்னணியில் அதுவும் தென் மாவட்ட நேட்டிவிட்டியில் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிறைக்குள்ளேயே நடக்கும் திருட்டு, அது தொடர்பான விசாரணை என காமெடி கலந்து இந்த வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த வெப் சீரிஸ் இயக்குனர் அமீனும் தானும் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறியுள்ளார் மலையாள இளம் நடிகையான அனார்கலி மரிக்கார்.
மலையாளத்தில் வினித் சீனிவாசன் தயாரித்த 'ஆனந்தம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனார்கலி மரிக்கார். 'ஜானகி ஜானேகி, மந்தாகினி ககனாச்சாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் வெளியான நிலையில் தனது காதலரான இயக்குனர் அமீனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ள பதிவில் தான் நாங்கள் இருவரும் காதலர்கள் என்பதையும் இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் தங்கள் குடும்பத்திற்கும் இது தெரியும் என்றும் கூறியுள்ளார் அனார்கலி. இந்த வெப் சீரிஸில் ஒரு பாடலையும் பாடியுள்ள அனார்கலி, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கவுதமி நாயருக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.




