தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

நடிகை ஸ்ரீ லீலா தெலுங்கு சினிமாவின் மூலம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபகாலமாக சில பிரபலமான நடிகைகள் பெண்களுக்கு உள்ள மாதவிடாய் பிரச்னைகளில் படப்பிடிப்பில் நடிப்பது குறித்து பேசி வருகின்றனர். இது குறித்து ஸ்ரீ லீலா தற்போது ஒரு பேட்டியில் கூறியதாவது, "மாதவிடாய் நமக்குப் பிரச்னையாக இருக்கக் கூடாது. நான் மாதவிடாயின் போது பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். அந்தப் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளது. ஆண்களைப் போலவே நாமும் சம உரிமை வேண்டுமென பேசுவதால், மாதவிடாயை ஒரு பிரச்னையாகப் பேசுவது சரியா? நாம் இந்த விஷயத்தில் சிந்தனையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி கொள்ள வேண்டும். இந்த மனத்தடையை நாம் ஒரு சாக்கு போக்காக சொல்லக்கூடாது." என பக்குவமாக கையாண்டார்.
கண்டிப்பாக இதனை சில நடிகைகள் பார்த்து எப்படி பக்குவமாக கையாள்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.




