ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் | 'விஸ்வரூபம்' படத்தின் கதையை சொல்ல முடியாமல் போனது வருத்தம்! - செல்வராகவன் | மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும் திரை வாழ்க்கையும் | பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே காலமானார் | 'ஜனநாயகன்' லீக், சைபர் கிரைம் விசாரணை ஆரம்பம் | பிஸியான நடிகையாக கயாடு லோஹர் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகள் என கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிஸியாக இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தற்போது இணைந்து நடித்து வரும் 'ரணபாலி' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்டனர். படப்பிடிப்புத் தளத்தில் அவர்களை வரவேற்று பேனர் வைத்து, கேக் வெட்டி, பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் புதுமணத் தம்பதியினரை வரவேற்றனர்.
சரித்திர காலப் படமாக உருவாகி வரும் 'ரணபாலி' படத்தை ராகுல் சங்கிரித்தியன் இயக்க, அஜய் அதுல் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.