Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயின் 'டூப்' வைத்து பிரசாரம் செய்யும் த.வெ.க வேட்பாளர்கள்: சேரன் விமர்சனம்

08 ஏப், 2026 - 11:17 IST
எழுத்தின் அளவு:
TVK-candidates-campaigning-using-Vijays-dupe-:-Cheran-criticizes
Advertisement


நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், கட்சி துவங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல் என எதிலும் போட்டியிடாமல், தங்களுடைய இலக்கு, 2026 சட்டசபை தேர்தல் தான், எனக்கூறி வந்தனர். அதேபோல், புதுச்சேரியில் நாளை (ஏப்.9), தமிழகத்தில் ஏப்.23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக விஜய் தரப்பில் வாய்மொழி அறிவிப்பாகவே வாக்குறுதிகள் சொல்லப்பட்டது. தேர்தல் அறிக்கை என தனியாக த.வெ.க கட்சியின் விஜய் இதுவரை வெளியிடவில்லை.

இது ஒருபுறம் இருக்க, தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், விஜய் அனைத்து தொகுதியிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, தான் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள், புதுச்சேரியில் ஓரிரு இடங்கள், சென்னையில் ஓரிரு இடங்கள் என அவரது பிரசாரம் சிறிய வட்டத்திற்குள் சுருங்கியது. இன்று தூத்துக்குடி, திருநெல்வேலியில் பிரசாரம் செய்ய இருக்கிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் 3, 4 மாவட்டத்திற்கு மட்டுமே அவரது சுற்றுப்பயணம் இருக்கிறது. மற்ற மாவட்டங்கள், அங்குள்ள தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் வருவாரா என அக்கட்சி வேட்பாளர்களுக்கே தெரியாது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், விஜய் நமக்காக பிரசாரம் செய்ய வரமாட்டார் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். அவரை வைத்து ஓட்டு வாங்க வேறு வழித்தெரியவில்லை என்பதுபோல, விஜய் போன்ற 'டூப்' பொம்மையை உருவாக்கி, பிரசார வேனில் நிற்க வைத்து அதனுடன் நின்று பிரசாரம் செய்கின்றனர். சிலர் விஜய் போன்ற தோற்றத்தில் ஒருவரை அவரை போலவே மேக்கப் போட்டு கூட்டிவந்து 'டூப்' விஜய் போல நிற்க வைத்து பிரசாரம் செய்கின்றனர். இதெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது மட்டுமல்லாமல், கிண்டலுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் 'டூப்' விஜய் வைத்து பிரசாரம் மேற்கொண்ட வீடியோவை பகிர்ந்து இயக்குனரும், நடிகருமான சேரன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சேரன் வெளியிட்ட பதிவில், ''ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல்.. இந்த பரப்புரை (பிரசாரம்) நிலை சரிதானா.. இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா... அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப், வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு... நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்...

நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக, கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார் ஒருவர் (சீமான்). அந்த தலைவன் எங்கே... முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே.. சிந்தியுங்கள் மக்களே... நீங்கள், யார் வேண்டுமா வேண்டாமா எனக்கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரசாரம் செய்கிறார்.. ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரசாரத்தை ரத்து செய்கிறீர்கள்... இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தானே...'' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் தலைப்பு 'ராக்கா'அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ... கை நழுவிய பெரிய நடிகர் படம்... உதவிய நயன்தாரா... உருகிய விக்னேஷ் சிவன் கை நழுவிய பெரிய நடிகர் படம்... உதவிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 ஏப், 2026 - 01:04 Report Abuse
Mohan என்ன கடவுளே அடுத்து இதுக்கு ஒரு பிரச்சினையை பாத்ததும் அழுதது பஞ்சாயத்து பண்ணி பண்ணி சேட்டலெமென்ட் பேசியது அறிவுள்ள யாரும் மறக்க முடியுமா
Rate this:
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
09 ஏப், 2026 - 11:04 Report Abuse
Palanivelu Kandasamy விஜய் ஒரு காரவான் பார்ட்டி. உண்மையில் காரவானிலிருந்து பேசிக்கொண்டே போகலாம். தொண்டர்களுக்கு புரிந்திருக்கும் - இந்த ஆள் வந்தால் மேலும் ஆக்சிடென்ட் தான் ஆகும், எனவே கட் அவுட்டே போதும் என்று நினைத்திருப்பார்கள்.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
09 ஏப், 2026 - 09:04 Report Abuse
angbu ganesh இந்த வயதிலும் ஸ்டாலின் உழைக்கிறார் வோட்டு கேக்கிறார் அதானே அவருடைய பொழப்பு வேற வேல தெரியாது
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09 ஏப், 2026 - 06:04 Report Abuse
Mani . V சரி, உனக்கும் பொறை போடும் உன் முதலாளி குடும்பம், அதுதான் ஊழலின் தந்தை, ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதி குடும்பம் அவரைப் பிரசாரம் செய்ய போக விடாமல் கேடுகெட்ட காவல்துறையை வைத்து முட்டுக்கட்டை போடுதே. எங்கே நீ சரியான ஆ.... மகனாக இருந்தால் இது பற்றி குரல் கொடு பார்ப்போம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap