புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் 'லெஜண்ட்' படத்தை தொடர்ந்து தற்போது 'லீடர்' படத்தை தயாரித்து நடித்துள்ளார். இன்று அந்த படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "லீடர் என்ற திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
இந்த படத்தின் காப்புரிமை அனைத்தும் என்னிடம்தான் உள்ளது. பொதுவாக புதிய திரைப்படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரத்துக்குள் சட்ட விரோதமாக அந்த படத்தை வலைதளங்கள் வெளியிடுகின்றன. இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வலைதளங்களின் விவரங்களை தாக்கல் செய்துள்ளேன். நான் நடித்து தயாரித்துள்ள 'லீடர்' திரைப்படத்தை இந்த வலைதளங்கள் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கவேண்டும்." என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், லீடர் படத்தை இணையதளங்கள் சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்து வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.




