Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: பாலிவுட் நடிகர்களின் ஆலோசகராக இருந்த வலம்புரி சோமநாதன்

03 ஏப், 2026 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Flashback-Valampuri-Somanathan,-who-was-a-consultant-to-Bollywood-actors
Advertisement


இப்போதெல்லாம் ஒரு படத்தின் வசனத்தை அந்த படத்தின் இயக்குனர்களே எழுதிக் கொள்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதற்கென்று தனித்தனியாக ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் நட்சத்திர அந்தஸ்தோடு இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் வலம்புரி சோமநாதன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்திற்கு தனித்தனியாக சம்பளம் வாங்குவாராம். மூன்றையும் கூட்டினால் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோவின் சம்பளத்திற்கு நிகராக இருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டம் வலம்புரியில் பிறந்த சோமநாதன் 'திருமகள்' என்ற பத்திரிகையின் மூலம் தனது பணியை தொடங்கினார். பின்னர் சென்னை வந்து கவிஞர் கண்ணதாசனின் பத்திரிகைகளில் பணியாற்றினார். பத்திரிகைகளில் சோமநாதன் எழுதிய கதைகளால் கவரப்பட்ட ஏவிஎம் செட்டியார். அவரை தனது கதை இலாகாவில் இணைத்துக் கொண்டார்.

சோமநாதன் எழுதிய படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது. அவைகள் குடும்ப படங்களாக இருந்தது. சோமநாதன் சொந்தப்பட நிறுவனம் ஆரம்பித்து, "திருமணம்' என்னும் படத்தை பீம்சிங் இயக்கத்தில் எடுத்தார். படம் வெற்றியடைந்தது. தொடர்ந்து பீம்சிங்கும், சோமநாதனும் இணைந்து பல வெற்றிப் படங்களை தந்தார்கள். திரைக்கதை அமைப்பில் திறமையாக இருந்த சோமநாதனை திலீப்குமார் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகர்கள் கதை ஆலோசகராக வைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒரு கதையில் நடிக்கும் முன்பு அந்த கதையை சோமநாதனை படிக்க வைத்து அவரது ஆலோசனைகளை கேட்டு நடித்தார்கள்.

சிகப்புக்கல் மூக்குத்தி, துணை இருப்பாள் மீனாட்சி, லலிதா, துணைவி படங்களை இயக்கினார். தேசிய மற்றும் மாநில திரைப்பட விருது கமிட்டியில் பணியாற்றினார், பல திரைப்பட சங்கங்களில் பணியாற்றினார். ரஷிய நாட்டின் அழைப்பின் பேரில் மூன்று முறை ரஷிய திரைப்பட விழாவிற்கு சென்று வந்தார். கடந்த 2010ம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யஷ் - பஸ் டிரைவரின் மகன் டூ பான் இந்தியா படங்களின் தயாரிப்பாளர்யஷ் - பஸ் டிரைவரின் மகன் டூ பான் ... பிளாஷ்பேக்:  வாணிஸ்ரீயின் உறுதியை உடைத்த தமிழ் இயக்குனர் பிளாஷ்பேக்: வாணிஸ்ரீயின் உறுதியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap