Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை தந்த தனிமை… மாளவிகா மோகனன் வருத்தமும், மகிழ்வும்…

02 ஏப், 2026 - 06:01 IST
எழுத்தின் அளவு:
The-loneliness-of-Chennai...-Malavika-Mohanans-sadness-and-joy...
Advertisement


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின் விஜய் ஜோடியாக 'மாஸ்டர்', தனுஷ் ஜோடியாக 'மாறன்', படங்களிலும் 'தங்கலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். கார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் 'பாக்கெட் நாவல்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்ட ஒரு அரங்கில் நடந்து வந்தது.

மார்ச் மாதத்தில் சென்னையில் தனிமையில் இருந்தது குறித்து ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். அதில்,

“மார்ச் மாதம் எனக்கு ஒரு கலவையான மாதமாக இருந்தது.

அந்த மாதத்தின் பெரிய ஹைலைட் ? 'பாக்கெட் நாவல்' படத்தின் ஷூட்டிங் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்தது.

நமது தலைமுறையின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று சொல்லலாம். அவரது வேலை முறையைப் பார்த்து, அவரால் வழிநடத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு இருப்பது என் கேரியரில் இதுவரை நான் பெற்ற மிகச் சிறப்பான கிரியேட்டிவ் அனுபவங்களில் ஒன்று. (இதைப் பற்றி பின்னாடி விரிவாக எழுதுகிறேன், அது நீண்ட கதை).

மாதத்தின் பெரும்பகுதியை சென்னையில் ஷூட்டிங்குக்காக செலவிட்டேன். வேலை அற்புதமாக இருந்தாலும், வீட்டை விட்டு இவ்வளவு நாள் தள்ளி இருந்தது என்னை எதிர்பார்த்ததை விட அதிகமாக பாதித்தது. நீண்ட நாள் வேலை முடிந்து காலியான அறைக்கு திரும்புவது எளிதாகவே இல்லை — எவ்வளவு தடவை செய்தாலும் அது பழகாது போல. இந்த முறை தனிமை என்னை ரொம்பவே உலுக்கியது.

குடும்பம் இரண்டு நாள் வருகை தந்தபோது என் ஆன்மாவுக்கு ஒரு பெரிய இடைவெளி கிடைத்தது. சென்னை மற்றும் மகாபலிபுரத்தின் அழகான கோவில்களைச் சுற்றினோம், உள்ளூர் உணவு வகைகளை எல்லாம் சாப்பிட்டோம், அவர்களுடன் இருந்ததே ரொம்ப நல்லா இருந்தது. குறிப்பாக என் பாட்டி வந்தது, அவர் அரிதாகத்தான் வருவார்.

மாதத்தின் பெரும்பகுதியை வெளியில் செலவழித்துவிட்டு, சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு திரும்பினேன். இரண்டு நாள் முன்பு ஒரு அழகான சூரிய அஸ்தமன படகு சவாரி போனேன். வானம் அற்புதமாக இருந்தது, கடல் காற்று குணப்படுத்துவதாக இருந்தது, அலைகள் மிகவும் இதமாக இருந்தன. அந்த மாலை, வீட்டை ரொம்பவே மிஸ் செய்த நிலையில், மும்பையின் மீது இன்னும் கொஞ்சம் காதல் விழுந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம், டி ஆர் ராஜகுமாரியின் கடைசிப் படம் கவிஞர் கண்ணதாசனின் “வானம்பாடி”பிளாஷ்பேக்: நடிகை ஜோதிலட்சுமியின் ... கேரளாவில் எஸ்பிபியின் உருவச்சிலை மற்றும் நினைவு பூங்கா திறப்பு கேரளாவில் எஸ்பிபியின் உருவச்சிலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap